Tuesday, January 22, 2019

வசம்பு பயன்❄

விசம் முறிவு : வசம்பு + மஞ்சள்
அலர்ஜி : வசம்பு + வெந்தயம்
நரம்புதளரச்சி : வசம்பு + கருப்பட்டி
வயிற்று வலி : வசம்பு + தேன்
தோல் நோய் : வசம்பு + மஞ்சள்
திக்கு வாய் : வசம்பு + தேன்
வயிற்று கோளாறு : வசம்பு+ சீரகம்
சிறுநீரக கோளாறு : வசம்பு + புதினா + சின்னவெங்காயம்
வயிற்றிள்ள பூச்சிகளை வெளியேற்ற : வசம்பு + பூண்டு + வெள்ளம்
 மூட்டுவலி : வசம்பு + மிளகு + சுக்கு
சீதபேதி : வசம்பு + நொங்கு
அஜீரணம் : பசியின்மை
நியாபக சக்தி : வசம்பு + வல்லாரை + தேன்
வேர்குரு : வசம்பு + பெருங்காயம் + பால்
வாயு தொல்லை : வசம்பு + சீரகம் + மோர்
மாதவிடாய் : வசம்பு + செவ்வாலை பழம்

மூலிகை தலையனை💫

மூலிகை தலையனை

தலைக்கு வந்தது தலைப்பாயோடு போச்சு என்பார்கள் வழக்கில்..உண்மையில் இதற்கு இன்னொரு மருத்துவ பொருள் தலைக்கு வந்தது தலையனையோடு போச்சு என்றும் சொல்வார்கள்..

இதில் சேர்க்கப்பட்டுள்ள மூலிகைகள்

1.ஈஸ்வர மூலி
2.சிறுசென்னி
3.கஞ்சாங்கோரையும்
4.பெரு சென்னி
5.சிறுபீளை
6.பெருபீளை
7.ஆடாதொடை
8.நொச்சி
9.கருவேப்பிலை
10.தும்பை
11.வேப்பிலை
12.துளசி
13.வேப்பிலை
14.மருதாணி

சிறுக அளவில் சேர்க்கப்பட்ட மூலிகைகள்

15.சிவகரந்தை
16.கொட்டைகரந்தை
17.யூகலிப்டஸ்  மர இலை

கிழே சொல்லப்பட்டது போல் ஒவ்வொரு மூலிகைக்கும் விளக்கம் கொடுக்கலாம் அதாவது
1.ஈஸ்வர மூலி-ஈசனுக்கே (சிவன்) சவால் விட்ட மூலிகை.அதனால் தான் ஈஸ்வர மூலி.
2.சிறுசென்னி-கந்தகத்தை கட்டக்கூடிய மூலிகை.மற்றும் இதன் உப்பு பல நோய் வளர்ச்சியை நிலைநிறுத்தக்கூடியது. அந்த காலத்தில் கொடிய நோய்யை நிலை நிறுத்திய பின்பு தான் நோயையும் நாடியையும் அறிந்து பின் நோய்யை அகல செய்வார்கள்.

3.கஞ்சாங்கோரையும்-நாய்த்துளசி, பேய்த்துளசி என்றும் இதற்கு பெயருண்டு.நாய் போல அங்குமிங்கும் தாவும் மனதை அடக்கும் ஆற்றல்மிக்கது. துறவிகள் இந்த இலைகளை தம்முடனே எப்போதும் வைத்திருப்பார்கள்.

இப்படி ஒவ்வொரு மூலிகைகளின் தனி சிறப்பையும் விவரிக்க முடியும்..ஆனால் மூலிகை தலையனை என்ற பதிவுக்கு தெரிந்துக்கொள்வது  தேவை என்றாலும் இப்போதைக்கு அந்த விளக்கம் தேவையற்றதாகவே கருதுகிறேன்.மூலிகைகளால் செய்யப்பட்ட தலையனை என்பதனை மட்டுமே மனதில் நிறுத்துங்கள் போதும்...

இந்த தலையனையில் ஒரு zip பொருத்தப்படலாம் என உள்ளேன்.சளி காய்ச்சல் குழந்தைகளுக்கு ஏற்பட்டால் தலையனையில் இருந்து கொஞ்சம் ஒரு கைப்பிடி எடுத்து புகைப்போடலாம் மற்றும் கசாயம் வைத்து கூட கொடுக்கலாம்..