*மூலிகை உப்பு எடுக்கும் முறை:*
எந்த மூலிகையாக இருந்தாலும் அதிலிருந்து உப்பு எடுக்க வேண்டும் என்றால் இந்த முறையில் எடுக்கலாம்.
தேவையான மூலிகையை அதிக அளவில் எடுத்து வந்து காயவைத்து (நிழலில் காய வைத்தால் உப்பு அதிக வீரியம் கொண்டதாக இருக்கும்) பின் இரும்பு சட்டியில் காய்ந்த மூலிகையை போட்டு கொளுத்தி சாம்பல் எடுக்க வேண்டும்.
இவ்வாறு சேகரித்த சாம்பலை எல்லாம் ஒரு இரும்பு சட்டி அல்லது மண் சட்டியில் போட்டு அதில் நீர் ஊற்றி மேற்படி சாம்பல் கரையும் வரை வேப்பங்குச்சியால் நன்கு கலக்கவும்.
அதன் பிறகு இந்த நீரை அசையாமல் ஒரு இடத்தில் வைத்து விட்டு 3 அல்லது 4 மணி நேரம் கழித்து மீண்டும் கலக்கவும்.
இது போல ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு முறை வீதம் ஒரு வாரம் வரை செய்ய வேண்டும். அப்போது தான் மூலிகையின் சத்துக்கள் முழுவதும் நீரில் கரையும்.
பின்னர் ஒரு வாரம் கழித்து அடியில் தங்கிய கசடை மட்டும் நீக்கி விட்டு தெளிந்த நீரை மட்டும் தனியாக வடித்து எடுத்து இரும்பு சட்டியில் போட்டு காய்ச்சினால் அந்த நீரானது தைலம் போல கொழகொழவென வரும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டால் சிறிது நேரத்தில் நீரெல்லாம் வற்றி உப்பு மட்டும் அடியில் நிற்கும்.
மேற்படி தெளிந்த நீரை சட்டியில் ஊற்றி காய்ச்சாமல் சிறிய பீங்கான் கிண்ணங்களில் ஊற்றி சூரிய ஒளியில் வைத்தாலும் நீர் வற்றி உப்பு அடியில் நிற்கும். ஆனால் இது அதிக நேரம் எடுப்பதால் அடுப்பு வைத்து காய்ச்சுவது சிறந்தது.
இருப்பினும் சூரிய ஒளியில் வைத்து எடுத்த உப்பு தான் அதிக வீரியமாக இருக்கும்.
மரு.நந்தகுமார்
8248890954

அருமை பயனுள்ள தகவல்
ReplyDeleteமகிழ்ச்சி
ReplyDelete