Friday, July 20, 2018

🌹🌲🌹🌲🌹🌲🌹🌲அனைவருக்கும் வணக்கம்👏உடல் வலி மூட்டு வலி அடிபட்ட வலி  இவற்றிற்கு கிழி : நுணா இலை நொச்சி இலை தழுதாழை இலை எருக்க இலை ஆமணக்கு இலை புளிய இலை உத்தாமணி யிலை இவற்றை வகைக்கு கைப்பிடி எடுத்து துணியில் முடிச்சு கட்டி ஒரு சட்டியில் நல்லெண்ணை ஊற்றி அதில் முடிந்த இலைகளை அடுப்பிலிட்டு  சுட வைத்து சூடு தாங்கும் அளவில் வலியுள்ள இடங்களில் ஒத்தடமிட வலி நீங்கும். இது இலைக்கிழி எனப்படும் .🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹2. காய்ந்த சரக்குகளில் சித்தரத்தை ,அதிமதுரம் வாதநாராயணன், முடக்கத்தான்,மஞ்சள் ,நன்னாரி ஆகியன வகைக்கு 50 கிராம் பொடியாக வாங்கி துணியில் முடிச்சு கட்டி சட்டியில் நல்லெண் ணை ஊற்றி சுடவைத்து முடிச்சை அதில் நனைத்து வலியுள்ள இடத்தில் ஒத்தடமிட வலி நீங்கும் . இதுவே பொடிகிழிஎனப்படும் . 🌳🌳🌳🌳🌳🌳 மத்தன் தைலம். ஊமத்தன் இலைச்சாறு அரை லிட்டர் தேங்கா யெண்ணை ஒரு லிட்டர் மயில் துத்தம் 25கிராம் இவற்றை ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்துக் காய்ச்சி சாறு சுண்டிய பின் இறக்கி வைத்து ஆறாத புண் குழிப்புண் இவற்றில் தடவ ஆறும்.🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀இந்த எண்ணையில் பெட்ரோலியம் ஜெல்லி 350,தேன் மெழுகு150, போட்டு உருக்கி டப்பாக்களில் ஊற்றி பத்திரப்படுத்தி அனைத்து வித புண் காயம் சேற்றுப்புண் இவற்றில் தடவ ஆறும்.🍀🌹🌹🌹🍀🍀🍀🍀🍀🌹🌹🌹🍀🌹🍀🍀சீமையகத்தி இலையை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு அரைத்து , கருஞ்சீரகம் ,கார்போகரிசி கஸ்த்தூரி மஞ்சள் ஆகிவற்றை வகைக்கு 50கிராம் பொடித்து கலந்து ஒருலிட்டர் நீரடி முத்து எண்ணை யிலிட்டு காய்ச்சி மணல் பதத்தில் இறக்கி வடித்து வடித்த எண்ணையில் தேன் மெழுகு100, பெட்ரோலியம் ஜல்லி400  போட்டு உருக்கி டப்பாவில் ஊற்றவும்.சொறி சிரங்கு படை சேற்றுப்புண்,தேமல் ,பித்த வெடிப்பு இவற்றில் தடவ குணமாகும். நன்றி வணக்கம் . 

No comments:

Post a Comment