Friday, April 27, 2018

சித்த மருந்து

அன்பார்ந்த சித்தர் மரபில் வந்த சித்த மருத்துவர்களே 
*************************************************************
இன்றைய காலகட்டத்தின் உணவுமுறை மாற்றம்.தரமற்ற உணவுகள்.இதனால் ஏற்படும் இரத்த பற்றாகுறை.மற்றும் விடுதி வாழ்க்கை.மன அழுத்தம்.போன்ற பல்வேறு காரனங்களால் பென்களின் மாதவிடாய் சுலற்ச்சியில் மாற்றம் ஏற்ப்பட்டு நூற்றுக்கு எம்பது சதவிகிதம் தாய்மார்களும். சகோதிரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் அவர்களின் ஆரோக்யம்.குடும்ப வாழ்க்கை.கருத்தரிப்பது போன்றவற்றில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட அனுபவ மருத்துவமுறை பதிவிடுகிறேன். அனைத்து மருத்துவர்களும் தயார் செய்து பயன்படுத்தவும் .   
************************************************                                          சந்திர பிரபாவதி செந்தூரம்.     
------------------------------------------------                                                      சுத்தி லிங்கம் .20 கிராம்.
சுத்தி இந்துப்பு.20 கிராம்
இரண்டையும் சேர்த்து 1மணி நேரம் நன்கு அரைத்து கண்ணாடி பாட்டிலில் பத்திரப் பபடுத்தவும்.
இதனை  வேப்பங் கொழுந்து சூரணம் அல்லது சுக்கு தூலுடண் 200 மில்லி கிராம் செந்தூரம் சேர்த்து காலை மாலை தேனில் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்.
சூதக வாய்வு.சூதக பந்தம்.சூதக சூலை.பிரசவ காலத்தில் உண்டாகும் அழுக்கு இதன் காரனமாக வரும் சுரம். போன்ற கருப்பை பற்றிய நோய்கள் தீரும்.மற்றும் குடல் புண் சரியாகும்.இதனை தொடர்ந்து 40 நாள் வரை கொடுக்கலாம்.
_____________________________
பென்களின் நீர் கட்டி(pcod)
சூதக வாய்வு.மகோதரம்.
இரத்த குறைவு.நீர் வீக்கம்.
தடைபடும் மாதவிடாய் அதாவது 2அல்லது 3 மாதத்திற்க்கு ஒருமுறை என தள்ளி போவது  எனஅனைத்து பிரச்சனைக்கும்.
குமரி கேப்ஸியூல் No.1.
காலை-1.மாலை-1.
குமரி கேப்ஸியூல்-2.
மதியம்-1.இரவு-1. கொடுத்தால் சரியாகும்.
**************************
**************************
குமரி கேப்ஸியூல் NO-1
************************
சந்திர பிரபாவதி செந்தூரம்-100 கிராம்.
சுத்தி சுக்கு தூள்-100 கிராம்.
வேப்பம் பூ பொடி-150 கிராம்.
மூன்றையும் நன்கு அரைத்து 500 மில்லி கிராம் கேப்ஸியூலில் அடைக்கவும்.
******************************
குமரி கேப்ஸியூல் NO-2.
*************************
தரமான அன்னபேதி செந்தூரம்-100 கிராம்.
சுத்தி கடுக்காய் தூள்-100 கிராம்.
சுத்தி மிளகு தூள்-25 கிராம்.
குமரி சிலாசத்து பஸ்பம்-20 கிராம். நான்கையும் கல்வத்தில் போட்டு கரிப்பான் சாறு 700 மில்லி சிறிது சிறிதாக விட்டு நன்கு அரைத்து வெய்யலில் காய வைத்து சூரணமாக்கி 500 மில்லி கிராம் கேப்ஸியூலில் அடைக்கவும்.
***************************
இந்த மருந்துகள்  அனுபவமானவை அனைத்து மருத்துவர்களும்  தயார் செய்து பயன்படுத்தவும்.
**************************






தேங்காய் எண்ணெயில் தாழம்பூ வை ஊற வைத்து அந்த எண்ணெயை அடி வயிற்றில் பெண்கள் தேய்த்து வர *வெள்ளை படுதல் குணமாகும்*
திருச்சிற்றம்பலம்🙏🌷🌿🔱






*ஆண்மை தரும் அமுக்கரா*


                     அமுக்கராவை பாலில் வேகவைத்து, பிறகு காயவைத்து பொடி செய்துகொள்ளவும், இதில், ஐந்து கிராம் பொடியை தினமும் காலை மற்றும் இரவு  உணவுக்குப்பின் இருவேளை சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைபாடுகள் தீரும்.

                அமுக்கரா, பாதாம், பருப்பு, முந்திரி பருப்பு, அக்ரகாரம் தலா 100 கிராம் எடுத்துபொடி செய்து கொள்ளவும் இதில், தினமும் இரவு உணவுக்குப்பின் ஐந்து கிராம் அளவுக்குசாப்பிட்டுவந்தால் உடலுறவில்  ஈடுபாடு அதிகரிக்கும்.

                அமுக்கராவை பொடி செய்து தினமும் இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை ரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.

                   அமுக்கரா, சுக்கு ஏலக்காய், சித்தரத்தை தலா 100 கிராம் எடுத்து  அரைத்து ,தினமும் இரவு உணவுக்குப்பின் பாலுடன் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டுவந்தால் கை, கால், வலி குணமாகும்.
அமுக்கரா, நெருஞ்சில், கோரைக்கிழங்கு தலா 100 கிராம் எடுத்து  அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு இரவு உணவுக்குப்பின் பாலில் கலந்து குடித்துவந்தால் விந்தில்உயிரணுக்கள்  எண்ணிக்கை அதிகரிக்கும்.







பலா பூவை தீநீராக 3 நாட்கள் குடித்து வர   *மாதவிடாய் தடை பட்டு இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் நேரும்_
திருச்சிற்றம்பலம்🙏🌷🌿🔱

No comments:

Post a Comment