Friday, March 9, 2018

நரசிங்க லேகியம்⛄

*நரசிங்க லேகியம்*:

இது ஒரு கற்ப அவிழ்தம் அதாவது Best antioxident மற்றும் antibactrial, antiviral, antifungal ஆகும்.

முறை: நம் நாட்டு வைத்தியம்/பக்கம்: 380/அனுபவித்து பலன் கண்ட முறை.

*தேவையான சரக்குகள்:*

01. தண்ணீர் விட்டான் கிழங்கு உளர்ந்தது - 350 கிராம்
02. எள்ளு - 700 கிராம்
03. சிறு நெருஞ்சில் முள் - 700 கிராம்
04. சீந்தில் சர்கரை - 700 கிராம்
05. பால் மொதுக்கள் கிழங்கு - 20 கிராம்
06. ஊமத்தன் விதை - 20 கிராம்
07. சிவப்பு சித்ர மூலம் வேர் தோல்- 350 கிராம்
08. சேங்கொட்டை - 1200 கிராம்
09. சுக்கு - 280 கிராம்
10. மளகு - 280 கிராம்
11. திப்பிலி - 280 கிராம்
12. சாதிக்காய் - 150 கிராம்
13. சாதி பத்திரி - 150 கிராம்
14. கிராம்பு - 150 கிராம்
15. அதிமதுரம் - 150 கிராம்
16. பித ரோகிணி - 150 கிராம்
17. ஏல அரிசி - 150 கிராம்
18. சீனி - 2500 கிராம்
19. தேன் - 1250 கிராம்
20. பசு நெய் - 650 கிராம்

*செய்பாகம்:*

மேற்கண்ட சரக்குகளை கிரம படி சுத்தியும் தூய்மையும் செய்து நேர்மையாக பொடித்து நெய் மற்றும் தேனுடன் கலந்து லேகியம் செய்துக்கொள்ளவும். பிறகு லேகியத்தை ஒரு மாத காலம் தானிய புடமிட்டு பயன்படுத்தலாம்.

*அளவு:* சுண்டைகாய் அளவு முதல் கழற்சிக் காய் அளவு வரை

*அனுபானம்:* இந்த லேகியத்துடன் லிங்கசெந்துரம், பூர பற்பம், வீரசெந்தூரம், தாக செந்தூரம், ரச பற்பம், அயசெந்தூரம், காந்த செந்தூரம், அப்பிரக பற்பம், வங்க பற்பம், வெள்ளி பற்பம், தாமிர பற்பம், தங்க பற்பம் என நோய்களுக்கு தக்கவாறு அனுபானித்து வழங்க அதிசயிக்கும் வகையில் நோய்கள் குடி விட்டோடும்.

*தீரும் நோய்களும் பலன்களும்:*

01. நரை, திரை போகும், முக்குற்றத்தை சீர்படுத்தி வயோதிகம் வராமல் தடுத்து வாலிபத்தில் உடலையும் மனத்தையும் நெடுங்காலம் இருக்க வைக்கும் கற்ப மருந்து இது.

02. ஆண்களுக்கு ஆண்மை குறைவு நோய்களை குணம் செய்து ஆண் தன்மை முழுமையாக உருவாக்கி தரும்.

03. அதே போல பெண்களுக்கு மலட்டுத்தன்மையை போக்கி தாய்மையை சிறப்பாக உருவாக்கும்.

04. இந்த கற்ப அவிழ்தத்தை முறை படி உண்ட பின் கருதரித்த பெண்ணுக்கு சுகப்பிரசவம் ஆகும். அந்த தம்பதிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மிக உச்சமாக பெற்ற குழந்தை வரமாக கிடைக்கும். அதற்கு எவ்வித தடுப்பு ஊசிகளும் அவசியப்படாது.

05. வெந்குட்டம், கருங் குட்டம், குறை நோய் முதலான குட்டரோகங்கள் குணமாகும்.

06. சொறி, சிரங்கு, படை, தேமல் போன்ற சரும நோய்கள் தீரும்.

07. புண்,புரை, கிரந்தி, க்ஷயம், இருமல், விக்கல், வாந்தி, கல்லீரல் ரோகங்கள், பித்த பைரோகங்கள், இருதயரோகங்கள், நாக்கு நோய், பல் அசைவு, பல்வலி குத்தல், ஈறு நோய்கள், பீனிசம், உடல் நாற்றம், தலைவலி, கண் சம்மந்தமான ரோகங்கள், மூலம், பவுத்திரம், நீரா ம்பல், கவுசி, காந்தல், சல மகோதரம், சன்னி, பீடை, தோஷம், நீரிழிவு, புற்று, மேகவாய்வு, பயித்தியம் முதலான பித்த நோய்கள், மறதி நோய் முதலான அனைத்து கொடிய நோய்களும் தீரும்.

08. இம் மருந்தானது கற்ப அவிழ்தமாதலால் போக சக்தி, யோக சக்தி, ஞான சக்தி என அனைத்து சித்திகளையும் தரும் என்பது அனுபவசாலிகளுக்கு தெரிந்த ஒன்றே.

*குறிப்பு:*

01. பெண் போகம் தவிர்த்து, உணவில் உப்பு, புளி, காரம், கசப்பு  இவைகளை நீக்கி இச்சா பத்தியம் அனுஷ்டிக்கவும்.

02. சேங்கொட்களை மூக்கு வெட்டியும் சாணிப்பாலில் அவித்தும் சுத்தி செய்து உபயோகபடுத்துக.

03. ஊமத்தன் விதைகளை எலுமிச்சம்பழ சாற்றில் ஐந்து முறை பாவனை செய்து பயன்படுத்துக.

04. சாதா ஊமத்தன் விதையை விட கரு ஊமத்தன் விதை மருந்தில் சிறப்பாக வேலை செய்கிறது.

05. சிவப்பு சித்ர மூல வேர்பட்டை தான் சிறந்தது மற்றும் உரிய வேலை செய்யும், மாறாக வெள்ளை சித்ர மூலம் பயன்படுத்தினால் சுமாராக தான் மருந்து வேலை செய்யும்.

06. ஆரம்ப நிலையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் சேங்கொட்டை பயன்படுத்தி மருந்து செய்ய பரிட்சயம் இல்லாத மருத்துவர்கள் தனியாக இம்மருந்தை செய்ய முற்பட வேண்டாம். ஏனெனில் சேங்கொட்டை சுத்தி செய்கயில் தவறு நேர்ந்தால் கொடிய அவஸ்தைக்கு ஆளாக நேரிடும்.

07. இம்மருந்தானது செய்வதற்கு சற்று சிரமமாக இருந்தாலும் இதனை செய்து வைத்துக் கொண்டு மற்றும் இதன் துணை மருந்துகளை இம்மருந்துடன் பிரயோகிக்க தெரிந்துக் கொண்டால் வேறு மருந்தே தேவையில்லை என்பது தின்னம்.

*மருந்திற்கு முறிப்பு:*

01. இம் மருந்து செயல்யும்போது குற்றம் ஏற்பட்டு உடலில் தடிப்பு மற்றும் நமைச்சல் ஏற்பட்டால் ஆமணக்கு எண்ணெய் சாப்பிட்டு பேதி எடுத்து விட்டு ஆமணக்கு எண்ணெய் பூசி குளித்து வர அவஸ்தை படிப்படியாக மாறிவிடும்.

மரு.நந்நகுமார்
கூடுவாஞ்சேரி
99413 64966

No comments:

Post a Comment