முப்புவில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் :
முப்பு என்பது அற்புதமான ஆராய்ச்சிக்கான ஒரு பொருள் ஆகும். இதன் பெயரே ஆய்வாளர்கள் மத்தியில் குழப்பத்தைக் கொடுக்க கூடியதாக உள்ளது. சிலர் முப்பு என்றும் சிலர் முப்பூ என்றும் விளக்கம் கூறுகிறார்கள். இப்படி பெயரிலேயே குழப்பத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் பொருள் இது.
முப்புவில் பல வகைகள் உள்ளதாக நூல்களில் பார்க்க முடிகிறது. அவை வைத்திய முப்பு, மாந்திரீக முப்பு, வாதமுப்பு, யோகமுப்பு, ஞானமுப்பு என பலவகை முப்பு உண்டு என்ற கருத்தும் நடைமுறையில் உள்ளது. வள்ளலார் அவர்கள் வாதமுப்பு எனப்படும் வகாரமுப்பு வைத்திருந்ததாகவும் அதைக் கொண்டு தாழ்ந்த உலோகங்களை தங்கமாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன.
முப்புவைப் பற்றி கூறும்போது இரசவாதம் முடித்தலே முப்பு ஆகும். இரசவாதம் செய்யவில்லையானால் அது முப்பு இல்லை என்று கூறுவோரும் உண்டு.
முப்பு என்பது ஓர் அரிய மருந்து. முறைப்படி தயாரித்த இந்த மருந்தை வேறு எந்த மருந்துடன் சேர்த்தாலும் அம்மருந்தின் வீரியம் பல மடங்கு அதிகரிக்கும். பாசாணங்களை எடை குறையாமல் நீற்றவும் முப்பு பயன் படுகிறது. மேலும் மனிதனின் நோயை நீக்கி சாகாத் தன்மையைக் கொடுக்கும் என்றும், உடலை கல்தூண் போன்று வலிமையுடையதாகச் செய்யும் என்றும் முப்புவின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. மேலும் இது ஞானத்தைத் தரவல்லது என்றும் போற்றப்படுகிறது. இத்தனை சிறப்புகள் முப்புவைப் பற்றி கூறப்பட்டுள்ளதால் பலர் முப்புவைத் தேடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
முப்புவைப் பற்றிய தகவல்களை சித்தர்கள் நூல்களில் படித்தால் அதன் பலாபலன் பற்றி மிக மிக பெருமையாகப் பேசப்பட்டுள்ளதை காணலாம். ( முப்புவின் பெருமை மேலே கூறப்பட்டுள்ளது) அதனால் சித்தர் நூல்களைப் படிப்பவர்கள் இதனால் கிடைக்கும் சிறப்ப பலன்களை அறிந்து அவர்களை அறியாமலேயே முப்புவைப் பற்றி அறிந்து கொள்ள முயல்கிறார்கள். அந்த வகையில் சகமுப்பு ஆய்வாளர்களைப் பற்றிய தகவல்களை அறிந்து அவர்களிடம் சந்தேகங்கள் கேட்க முயல்கிறார்கள். இந்த தேடுதல் விரிவடையும் போது முப்பு ஆராய்ச்சியில் பலவித பொருட்களை முதல் பொருளாக கொண்டு ஆய்வு செய்வதை அறிய முடிகிறது. வைத்திய இரத்தினம் திரு. பலராமையா அவர்கள் முப்பு குரு என்ற நூலில் முப்புவைப் பற்றி பெரிய அளவில் விளக்கம் கொடுத்திருநதாலும் நடைமுறையில் பல்வகைப் பொருட்களை வைத்தே பல்வேறு குழுவினர் தனித்தனியாக ஆய்வு மேற்க்கொள்வதை அறிய முடிகிறது. சாதாரணமாக முப்பு ஆய்வாளர்கள் பலர் கையாழும் பொருள் சித்தர்கள் சொன்ன முப்புவின் பொருளுக்கு பொருந்துகிறதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இந்தமுதல் பொருளில் தெளிவற்ற குழப்பமான நிலை ஏற்பட்டால் இக்கலையில் முன்னேறுவது கடினம். எனவே முப்பு ஆய்விற்கான முதல் பொருள் எது என்பதில் தெளிவு ஏற்பட சித்தர் நூல்களை ஊன்றி படித்து பொருள் அறிந்து கொள்ள முயல வேண்டும். தொடர் முயற்சி தெளிவைக் கொடுத்து ஆராய்ச்சியாளரை வெற்றியை நோக்கி வழிநடத்தும்.
இனி முப்புவில் நடைமுறையில் பயன்படுத்தப்படும் ஆய்வுக்குறிய சில பொருட்களைப்பற்றி சிறிது பார்க்கலாம்.
1 : மண் பூநீர் :-
தை, மாசி, பங்குனி, சித்திரை ஆகிய மாதங்களில் பவுர்ணமியை ஒட்டிய சில நாட்கள் இரவு உவர் மண் பூமியில் (பொட்டல் பூமியில்) தானாகவே பொங்கி கசிந்து வரும் ஒருவகை உப்பு நீர். இதை பூநீர் அல்லது மண்பூநீர் என்று அழைப்பர். முப்பு ஆய்வாளர்கள் 90% பேர் இதிலேயே ஆய்வை மேற்கொள்கிறார்கள். இந்த மண்பூநீரைத் தொடாத முப்பு ஆய்வாளர்கள் இருக்க முடியாது என்றே சொல்லலாம். இது தான் முப்புவிற்கான முதல் பொருள் என்ற சித்தர் நூல்களில் ஏறாளமான ஆதார பாடல்கள் உள்ளன. அதனை நம்பி ஆய்வாளர்களும் பல ஆராய்ச்சிகள் செய்கிறார்கள். அதனால் சித்தர்கள் கூறிய ஒரு பலனும் கிடைக்காமல் தோல்வியில் துவண்டு போகிறார்கள். அத்தகையவர்கள் முப்புவிற்கு சவுட்டுமண் எனப்படும் மண்பூநீர் பயன்படாது என்று சித்தர்கள் கூறியுள்ள ஏறாளமான நூல் குறிப்புகள் உள்ளன அதையும் படித்தால் தெளிவடைய வழி கிடைக்கும். எது எப்படி இருந்தாலும் முப்பு ஆய்வில் முதல் இடத்தைப் பிடிப்பது இந்த மண்பூநீர் தான். இதைப்பற்றி திரு. பலராமையா அவர்கள் முப்பு குரு நூலில் போதும் என்ற அளவிற்கு தேவையான விளக்கங்களை கொடுத்துள்ளார்கள்.
2: தென்னை :-
முப்பு ஆய்வில் இரண்டாம் இடம் பிடிப்பது தென்னை மரத்தின் பொருட்கள் ஆகும். தென்னையை மையமாகக் கொண்டு ஆய்வு செய்பவர்கள் ஆய்விற்கான காரணத்தை கூறும்போது காலஞ்சென்ற வெத்திய மற்றும் முப்பு ஆய்வாளரை கைகாட்டி அவரே நேரடியாக பலருக்கு கூறியுள்ளார் அதனால் தேங்காயே மெய்ப்பொருள் என்று கூறுகிறார்கள். மேலும் கருணாகர சாமிகள் தென்னந் தோப்பில் தான் குடியிருந்தார். காரணமில்லாமலா தென்னந் தோப்பில் குடியிருந்திருப்பார் என்று வினா எழுப்பி தென்னை மரத்தின் பலவகைப் பொருட்களைக் கொண்டு ஆய்வை மேற் கொள்கிறார்கள். இன்னுஞ் சிலர் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பண்டிகையின் போது தென்னை ஓலையைத்தான் பயன்படுத்துகிறார்கள் . மெய்ப்பொருள் தேங்காய்தான் என்பதை விளக்கும் பண்டிகைதான் இது என்று கூறி ஆய்வை மேற்கொள்கிறார்கள். குருத்தோலை பண்டிகை அன்று மேலை நாட்டில் ஒலிவ மர இலையைப் பயன்படுத்துகிறார்கள். பைபிளிலும் ஒலிவ மர இலைகளைப் பயன்படுத்தியதாகத்தான் குறிப்புகள் உள்ளன. நம் நாட்டில் ஒலிவ மரம் இல்லையாதலால் எளிதாக கிடைக்கும் தென்னை ஓலைகளை பயன்படுத்துகிறார்கள். எப்படி விளக்கம் கூறினாலும் முப்பு ஆய்வில் தேங்காய் அல்லது தென்னை மர பொருட்களின் ஆய்வு இரண்டாம் இடத்தில் உள்ளது.
சித்தர் நூல்களில் தளிரான மூலிகையல்ல என்றும் மூலிகையில் வகாரமேது என்று கூறி இதற்கு விளக்கம் கூறப்பட்டாலும், பெயரிடப்படாத பழைய ஓலைச் சுவடிகளில் பச்சை மர உச்சியில் மெய்ப்பொருள் உள்ளதாக கூறப்பட்டுள்ளதாக சில நூல்களில் பாடல்கள் பதிப்பிக்கப் பட்டுள்ளதைப் பார்க்கலாம். ஆனாலும் அந்த நூல் எழுதிய சித்தர் பெயர் குறிப்பிடாமல் ஓலைச் சுவடி பாடல் என்று குறிப்பிட்டுள்ளதை கவனத்தில் கொள்ளவும். மேலை நாட்டு ஞானிகளின் நூல்களைப் படித்தால் அதிலும் தாவர ராஜ்ஜியத்தை சேர்ந்த பொருள் என்றும், தாவர சத்துகளின் சார் என்றும், ஜீவ விருட்சத்தின் இனிப்புச் சார் என்றும் கூறப்பட்டுள்ளதைக் காணலாம். அதே போல் உன் ஆய்வுப் பொருளை தாவரத்தில் தேடாதே என்று கூறப்பட்டுள்ளதையும் காணலாம்.
3: பனை :-
பழைய காலங்களில் தமிழகத்தில் தென்னை கிடையாதாம். எனவே மெய்ப் பொருள் பனைமரமே ஆகும் என்று கூறி பனைமரத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டும் ஆய்வு செய்கிறார்கள். உலகம் முழுவதும் 34 வகையான பனை மரங்கள் உள்ளதாக கணக்கிடப் பட்டுள்ளது.
4: முட்டை:-
உலகம் நீள் வட்ட உருண்டை. கோழி முட்டையும் பூமி உருண்டை போன்ற தோற்றத்திலேயே இருக்கிறது. அதனால் மெய்ப் பொருள் கோழி முட்டைதான் என ஆணித்தரமாக கூறி ஆய்வு செய்கிறார்கள். பேரண்டம் என்பது உலகம், சிற்றண்டம் என்பது கோழிமுட்டை என்று சித்தர் நூல்களில் குறிப்புகள் காணப்படுவதால் முட்டையே மெய்ப்பொருள் என்கிறார்கள். முட்டையின் வெள்ளைக் கரு சந்திரன் என்றும், மஞ்சள் கரு சூரியன் என்றும் கூறி ஆய்வு செய்கிறார்கள். முட்டை ஓட்டை சுண்ணம் செய்து இதோடு சேர்த்துக் கொள்கிறார்கள். மேலும் முட்டையின் வெள்ளைக் கரு விந்து அதாவது இரசம் என்றும், முட்டையின் மஞ்சள் கரு நாதம் அதாவது கந்தகம் என்றும், முட்டை ஓட்டுச் சுண்ணம் உப்பு என்றும் விளக்கம் கூறுகிறார்கள். அகத்தியர் அண்டம் என்பது முட்டை இல்லை என்று கூறியுள்ளார்.
5: வாழை :-
வாழை மரமே மெய்ப் பொருள் என்று கூறி அதன் கிழங்கு, அதன் தண்டு, அதன் பூ போன்றவற்றை ஆய்விற்குப் பயன்படுத்துகிறார்கள். அதுவும் இந்த ஆய்வை பொர்ணமியில் தான் செய்ய வேண்டும் என்றும், அமாவாசை போன்ற காலங்களில் செய்யக்கூடாது என்றும் கூறுகிறார்கள். அதே போல் வாழைக் கன்றிலும் முப்பு செய்யக் கூடாதாம். வாழை மரத்தில் முப்பு ஆய்வை மாந்திரீக ஆர்வலர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.
6: நாகதாழி:-
சமீப காலங்களில் நாகதாளியும் முப்புவின் முதல் பொருள் என்ற கருத்து கொண்ட முக நூல் பதிவுகள் வந்ததை பார்க்க முடிந்தது. நாகதாளி உப்பும் மண் பூநீர் உப்பும் ஒரே மாதிரியாக உள்ளதாக அந்த முகநூல் பதிவில் கூறப்பட்டுள்ளது. இதுவும் முப்பு ஆய்வில் புதிய வரவாக உள்ளது.
7: விராலி :-
விராலி என்ற மூலிகையில் தங்கச் சத்து உள்ளது. அந்த மூல சத்தே முப்பு ஆகும். எனவே அதை எப்படியாவது பிரித்து எடுத்து சுண்ணம் பண்ணினால் உடலும் நோய்நீங்கி தங்க நிறமடையும். இரசத்தையும் வேதித்து தங்கமாக்கலாம் என்று கூறி சிலர் இதிலும் ஆய்வு செய்கிறார்கள்.
8: வெங்காயம் :-
வெங்காயத்தில் கந்தகச் சத்து உள்ளது. எனவே குறிப்பிப்ட செய்முறை செய்து வெங்காயத்தை அழுக வைத்து அல்லது வெங்காயச்சாறை எடுத்து புளிக்க வைத்து அதன் கந்தக சத்தை தனியாக பிரித்து விட்டோமானால் எல்லாமே முடிந்தது என்று கூறி சிலர் ஆய்வு செய்கிறார்கள். சிலர் வெள்ளைப் பூண்டிலும் ஆய்வு செய்கிறார்கள்.
9: காளான்:-
இயற்கை காளான் குறிப்பிட்ட சில காலங்களில் அதிகாலையில் மட்டும் கிடைக்கும் ஒரு பொருள். வெயில் பட்ட சிறிது நேரத்தில் புளு உண்டாகி கெட்டுப் போய் தானாகவே காணாமல் போய்விடும். காளான் மெய்ப் பொருள் என்று கூறி ஆய்வு செய்பவர்கள் காளானோடு கலக்க சிலர் பனி நீரைப் எடுத்து காளானோடு கலந்து குறிப்பிட்ட வெப்ப நிலையில் புளிக்க வைத்து வாலையில் வடித்து முப்பு தயாரிக்க முயல்கிறார்கள். சிலர் பனி நீருக்குப் பதில் ஆற்று நீரை கொண்டுவந்து வாலையில் வடித்து பயன்படுத்துகிறார்கள். காளான் தான் மெய்ப்பொருள் என்பதற்க்கு இவர்கள் பைபிளில் இருந்து ஆதாரம் காட்டுகிறார்கள். கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாட்டில் மக்களுக்கு கடவுள் மன்னா என்னும் பொருளை உணவாக வழங்கினார். வெண்மை நிறம் கொண்ட அதை அதி காலையில் எடுக்க வேண்டும். சூரிய ஒளி பட்டால் காணாமல் போய்விடும் என்றும் அன்றைய தேவைக்கு அளவாக மட்டுமே சேகரித்து பயன்படுத்த வேண்டும் என்று கூறபட்டுள்ளது. இது அனைத்தும் காளானுக்கே பொருந்தும் என்று கூறி காளானில் ஆய்வு செய்கிற்றார்கள். சித்தர்களும் பூநீரை அதிகாலையில் சூரிய ஒளி படும்முன் எடுக்க வேண்டும், சூரிய ஒளி பட்டால் கெட்டுவிடும் என்றும் கூறியுள்ளனர். இதுவும் காளானுக்கே பொருந்தும் என்று விளக்கம் கூறுகிறார்கள்.
10: பசும் பால்:-
பால் வெண்மையாக உள்ளது. பாலை காலை எடுத்து உரிய காலத்திற்குள் பக்குவப் படுத்தாவிட்டால் கெட்டுவிடும். அதனால் பசும் பாலே மெய்ப் பொருள் என்று கூறி சிலர் ஆய்வு செய்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம் எல்லா முனிவர்கள் ஆசிரமத்திலும் பசுமாடு வளர்க்கப் பட்டுள்ளதை புராணங்களில் படிக்கலாம். அதற்கு காமதேனு என்று பெயர். எனவே பால் தான் மெய்ப்பொருள் என்று கூறி ஆய்வு செய்கிறார்கள். மேலும் கிறிஸ்து மாட்டு கொட்டகையில் பிறந்தார், கிறிஸ்ணரும் மாடு மேய்க்கிறார். இரண்டு கடவுளுக்கும் பசுக்களோடு தொடர்பு உள்ளது. எனவே பால்தான் மெய்ப்பொருள் என்று உறுதியாக கூறுகிறார்கள். பசுவில் நான்கு நிற பசுக்கள் உள்ளதையும் ஆதாரமாக காட்டுகிறார்கள்.
10: கண்:-
உடலில் ஒளிரும் தன்மை கொண்ட ஒரே பொருள் கண் ஆகும். எனவே கண்தான் மெப்ப்பொருள் என்று கூறுகிறார்கள். வள்ளலார் முகம் பார்க்கும் கண்ணாடியில் தனது கண்ணையே பார்த்து பயிற்சி செய்தார். எனவே கண்ணில் சில பயிற்சிகள் செய்தால் போதுமானது. அது மனிதனுக்கு இறவா நிலையை வழங்கும் என்று கூறி வள்ளலார் பக்தர்கள் கண் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அதற்கு திருவடிப் பயிற்ச்சி என்று பெயரிட்டுள்ளார்கள். சிலர் ஆட்டுக் கண்ணை கடையில் வாங்கி வந்தும் ஆய்வு செய்கிறார்கள்.
11: மூளை :-
சித்தர் நூல்களில் மூளையைப் பற்றி கூறப்பட்டுள்ளதால் சிலர் விலங்குகளின் மூளையை வாங்கி கொண்டு வந்து ஆய்வு செய்கிறார்கள். இது தவறான செயல். சித்தர்கள் நம் பொருள் மூளை பொன்று கொழகொழப்பாக இருக்கும் என்பதைத் தெரிவிக்கவே மூளை என்ற வார்த்தையை குறியீட்டு உருவகச் சொல்லாக பயன்படுத்தியுள்ளார்கள். எனவே இதற்கு நேரடி அர்த்தம் கொண்டு ஆய்வு செய்தால் தவறான பாதைக்கு வழி நடத்தி சென்றுவிடும். எனவே விழிப்புடன் இருந்து சித்தர் நூல்களைப் படித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
12: மண்டை ஓடு:-
பேரண்டம் என்பது மண்டை ஓட்டையே குறிக்கும் என்று கூறி மண்டை ஓட்டை கொண்டுவந்து உரலிலிட்டு இடித்து மாவாக்கி தண்ணீரில் அல்லது பனிநீரில் கலக்கி தெளிவிறுத்து சூரிய ஒளியில் காய வைத்து கடும் கார சுண்ணமாக்குவதே முப்பு என்று கூறி சிலர் ஆய்வு செய்கிறார்கள். இது ஒரு பரிபாசைச் சொல் ஆகும். உலகத்திலுள்ள அனைத்து பொருட்களின் சாரமும் மெய்ப்பொருளில் அடங்கியுள்ளதால் இதை அண்ட ஓடு என்று கூறுகிறார்கள். எனவே தவறாக செல்லாமல் உண்மைப் பொருளைத் தேடி கண்டுபிடிக்க முயல வேண்டும்.
14: நெல்:-
நெல்லில் உள்ள உமியையும் அரிசியையும் சேர்த்து அரைத்ததே முப்பு என்று கூறி பயன் படுத்துகிறார்கள். இதில் வேக வைத்த நெல்லைப் பயன்படுத்த கூடாதாம். காய்ந்த பச்சை நெல்லையே பயன்படுத்த வேண்டுமாம். அப்போது தான் சிறந்த பலன் கிடைக்குமாம்.
15: கோரைப்புல்:-
உலகில் நூற்றுக் கணக்கான கோரை இனங்கள் உள்ளன. அவற்றில் உயர்ந்த மலை அடிவாரங்களில் அல்லது மலையில் கிடைக்கும் கோரையே சாகாக் கலைக்கு பயன்படும் பொருள் என்று கூறி அறிவியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்கிறார்கள்.
16: டைனோசர் முட்டை:-
திருச்சிக்கு அருகில் உள்ள பாடலூரின் அருகில் பூஞ்சை காடு என்ற ஒரு காடு உள்ளது. அங்கு உருண்டையான ஒருவித கற்கள் கிடைக்கின்றன. அதை டைனோசர் முட்டை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அந்த உருண்டை வடிவ கல்லே அண்டக்கல் என்று கூறி அதில் ஆய்வு செய்கிறார்கள். அந்த கல்லை இடித்து மாவாக்கி அமிலம் ( ஆசிட்) கலந்து பனியில் வைத்து கிடைக்கும் நீரை எடுத்து வாலையில் வடித்து முப்பு செய்கிறார்கள். இதில் சிகப்பு மற்றும் வெள்ளை நீர் என தனித்தனியாக பிரித்துக் பயன் படுத்துகிறார்கள். மேலும் சிலர் அங்கு கிடைக்கும் வெண்மை நிற சுண்ணாம்புக் கல்லையும், கண்ணாடி போன்ற தகட்டுப் படிமங்களையும் பயன்படுத்தி இணைத்து இதுவே முப்பு என்று கூறுகிறார்கள்.
17: தலைமுடி:-
தலை முடியை முதல் பொருளாகக் கொண்டு ஆய்வு செய்பவர்களும் உண்டு. அதற்கு அவர்கள் கூறிய காரணம் வியப்பானது, கற்பனைக்கும் எட்டாதது.
நான் கோவை வந்ததும் எனக்கு முதலில் அறிமுகமாகி நண்பரானவர் செல்வம் என்றழைக்கப்படும் இரத்தினம் என்ற சலூண் கடைக்காரர் ஆவார். பழக்கத்தின் காரமாக நான் ஓய்வு நேரங்களில் அவர் கடையில் இருப்பேன். அவருடைய குடும்ப உறவினர்கள் அனைவருக்கும் என்னைத் தெரியும். அந்த அடிப்படையில் என்னைத் தேடி வரும் வைத்திய நண்பர்களை சலூண் கடையின் அடையாளம் சொல்லி கடையில மகிழனைப் பார்க்க வந்திருக்கிறேன் என்று சொன்னால் நான் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டைக் காட்டுவார் என்று கூறி நண்பர்களுக்கு அடையாளம் கூறுவேன். ஒருவேளை நான் வேலை முடிந்து வர தாமதமானாலும் கடையில் இருந்து கொள்ளலாம். எவ்வளவு நேரம் இருந்தாலும் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். தேனீர் வாங்கி கொடுத்து இருக்கச் சொல்லி விடுவார். என்னைத் தேடி வரும் நண்பர்களுக்கு இதுவே என் இருப்பிட அடையாளம். இப்படி சலூண் கடை அடையாளம் மூலம்என்னை சந்தித்த சில நண்பர்கள் இணையத் தொடர்பு மூலம் ஒரு குழுவாக இணைய சலூண் கடை முடி பிரச்சனை தோன்றியிருக்கிறது. மகிழன் சலூன் கடையில் இருக்க வேண்டிய அவசியம் என்ன? காரணமில்லாமல் இருக்காது என்று அவர்களுக்குள்ளாகவே விவாதித்து தலை முடி ஏன் மெய்ப்பொருளாக இருக்க கூடாது என்று முடிவு செய்து ஒரு குழுவாக இணைந்து ஆய்வு செய்திருக்கிறார்கள். அந்த குழுவில் என் நெருங்கிய நண்பர்கள் சிலரும் அடக்கம். இது தான் எனக்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அவர்கள் தீவிரமாக தலை முடியை ஆய்வு செய்து எதையோ தயாரித்திருக்கிறார்கள். அதை சாப்பிட்டுப் பார்த்த ஒரு நண்பர் என்னை கைப்பேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் நாதநீர் தயாரிப்பிற்கு கூறிய முறையில் தயாராத்துள்ள மருந்தை சாப்பிட்டால் நாக்கு சுடுகிறது, புண்ணாகி விட்டது, நீங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது என கூறினீர்களே, சிறிதளவு சாப்பிட புண்ணாகி விட்டதே என்றார். நீங்கள் எந்த பொருளிலிருந்து தயாரித்தீர்கள் நான் கூறிய பொருளிலிருந்து தயாரித்தீர்களா எனக் கேட்டேன். அப்புறம் பேசுகிறேன் என தொடர்பை துண்டித்து விட்டார். இவர்கள் என்னை மையப்படுத்தி ஒரு கற்பனை கதையை உருவாக்கி செயல் படுகிறார்கள் என்ற தகவல் எனக்குத் தெரியாது. வேறொரு நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது இந்த நிகழ்வைப் பற்றி குறிப்பிட்டு.......... அந்த நண்பர் மேற்படி விசயத்தை கேட்டார், நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அப்புறம் பேசுவதாக கூறி துண்டித்து விட்டார் என்றேன். அப்போது அவர் உங்களுக்கு விசயமே தெரியாதா? என்று கேட்டுவிட்டு மேலே கூறியுள்ள சலூன் கடை மற்றும் முடி பற்றிய இரகசியத்தை கதையாக கூறி முடியில் ஆய்வு செய்து கொண்டிருக்கின்ற நபர்கள் பற்றிய ஒரு பெரிய பட்டியலையே கூறினார். என் நெருங்கிய நண்பர் எனக்கு கூறியிருப்பார் என்று நினைத்தாராம். இந்நிகழ்வு பற்றிய தகவல் எனக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியாக இருந்தது. சலூண் கடையில் நான் போய் இருப்பது குற்றமா? அதற்கு இப்படி ஒரு கற்பனையா? ஆச்சரிய மனிதர்கள். எது எப்படி இருந்தாலும் நான் கண்டிப்பாக தலை முடடியில் எந்த வித ஆய்வும் செய்யவில்லை. இது ஒரு கழிவுப் பொருள்.
18: அப்பிரகம்:-
அப்பிரகமானது நான்கு வகைப்படும். அவை, வெள்ளை, கருப்பு, சிகப்பு, மஞ்சள் ஆகியவையாம். சித்தர்கள் அண்ட பொருளுக்கு நான்கு வர்ணம் கூறியுள்ளதால் அது அப்பிரகத்தையே குறிக்கும் என்று அப்பிரக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் அப்பிரக ரசத்திற்கு அண்ட இரசம் என்ற பெயரும் உள்ளதால் சித்தர்கள் கூறிய மெய்ப் பொருள் அப்பிரகம் தான் என்று கூறி ஆய்வு செய்கிறார்கள்.
19: கருவங்கம்:-
இப்போது இணைய தள வசதி மூலம் தகவல் தொடர்பு எளிதாகிவிட்டது. அதனால் மெய்யியல் தொடர்புள்ள மேல் நாட்டு ஞானிகளின் நூல்களைப் பற்றி அறிந்து அவைகளைப் படிக்கிறோம். மேலை நாட்டு ஞானிகளின் நூல்களில் காரீயத்தில் இருந்து உன் வேலையைத் தொடங்கு, அப்போதுதான் இரசவாத கலையில் வெற்றி பெறுவாய் என்று கூறப்பட்டுள்ளதை மையமாகக் கொண்டு இதிலும் முப்பு ஆய்வை மேற்கொள்கிறார்கள்.. அதே மேலை நாட்டு நூல்களில் காரீயம் என்பது சாதாரண காரீயமில்லை, அது ஞானிகளின் காரீயமாகும் என்று கூறப் பட்டுள்ளதை கவனித்தால் இதன் சூட்சம இரகசியம் புரியும். இது குறுயீட்டுவடிவக் கலையை சார்ந்த எழுத்தியல் விளக்கமாகும். எனவே இதற்கு நேரடியாக பொருள் கொள்ளக் கூடாது.
20: குருவண்டு:-
குரு வண்டு என்று ஒரு வண்டு உண்டு என்று கூறி பெரிய கருத்த வண்டைக் கொண்டுவந்து ஆய்வு செய்பவர்களும் உண்டு. முப்புவிற்குத்தான் குரு வண்டு என்ற பெயர் உண்டே தவிர வண்டைப் பிடித்து கொண்டு வந்து முப்பு ஆய்வு செய்ய சித்தர்கள் சொல்லவில்லை. வண்டு எதையும் துளைக்கும் தன்மை கொண்டது. அதே போல நமது முப்பு மருந்தும் எல்லா இடங்களிலும் நுழைந்து வேலை செய்யும் தன்மை கொண்டது என்பதை விளக்கவே முப்புவிற்கு சிறப்பு பெயர் கொடுத்து குருவண்டு என்று சித்தர்கள் கூறியுள்ளார்கள். அகத்தியர் பல ஜீவ செந்துமில்லை என்று கூறியுள்ளதால் உயிரைக் கொன்று மருந்து செய்ய முயலக்கூடாது. இந்த வார்த்தையும் குறியீட்டு வடிவக் கலையை சார்ந்த எழுத்தியல் விளக்கமாகும்.
21: ஆறு புள்ளி வண்டு:-
ஆறு புள்ளிகள் உள்ள வண்டைப் பிடித்து கொண்டு வந்து இடித்து முப்பு மருந்து செய்பவர்களும் உண்டு. ஆறு புள்ளி வண்டு என்பது பரிபாசை. முப்பு ஆய்வில் உயிர் வதையோ அல்லது உயிர்க் கொலையோ கூடாது. சித்தர்கள் ஆறு ஆதாரத்தை புள்ளி வடிவில் குறிப்பிடுவது வழக்கம். முப்பு மருந்து தனித்தனி புள்ளி வடிவில் உள்ள ஆறு ஆதாரத்தையும் துளைத்து வேலை செய்யும் தன்மையைக் கொண்டது என்பதை விளக்கவே முப்பு மருந்தை ஆறு புள்ளி வண்டு என்று கூறுகிறார்கள். இந்த வார்த்தையும் குறியீட்டு வடிவக்கலையை சார்ந்த எழுத்தியல் விளக்கமாகும்.
21: கும்பிடு சிப்பி:-
மச்ச முனி சொல்லியுள்ள கும்பிடு சிப்பி என்பது பரிபாசை என்பதை அறியாமல் சிலர் ஆற்றிலிருக்கும் கும்பிடு சிப்பியை உயிரோடு கொண்டு அதை வதைத்து கொன்று மருந்து செய்ய முயல்கிறார்கள். முப்பு மருந்தில் உயிர் வதைக்கே இடம் கிடையாது. இது பூநீரைக் குறிக்கும் பரிபாசை. கும்பிடுதல் என்பது இரண்டும் ஒன்றாக இணைந்திருத்தலைக்குறிக்கும். கும்பிடு சிப்பி எப்போதும் நீரில் தான் இருக்கும். அதாவது இரண்டு நீர்த் தன்மை கொண்ட பொருட்கள் வேறுபாடு காணமுடியாதபடி ஒன்றாக இணைந்துள்ளன. அவற்றை சிறிது கடினப்பட்டுதான் பிரிக்க முடியும் என்பதை விளக்கும் குறியீட்டு வடிவக் கலையின் பின்னாளைய எழுத்தியல் விளக்கமாகும். ஆங்கில பட விளக்க இரசவாத நூல்களில் தவளை படம் போடப் பட்டுள்ளதைக் காணலாம். இந்த படத்திற்கு நேரடி பொருள் கொண்டால் தவறான பாதையை தேர்ந்தெடுத்த நிலையை அடைவோம். இதுவும் ஒரு பரிபாசை விளக்க படமாகும். தவளையின் இயல்பு அமைப்பு நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்டது. நமது ஆய்வுப் பொருளும் நிலத் தன்மையும் நீர்த் தன்மையும் ஒன்றாக சேர்ந்த ஒரு பொருளாக உள்ளது என்பதை விளக்கவே தவளை படம் வரைந்திருப்பார்கள். இது குறியீட்டு வடிவக் கலை விளக்கமாகும்.
22:- ஆற்று மணலில் உள்ள சிகப்பு, கருப்பு, மஞ்சள், வெள்ளை போன்ற சிறு சிறு கற்களை தனித்தனியாக சேகரித்து சிலர் ஆய்வு செய்கிறார்கள்.
23:- சீனிக்கல் எனப்படும் வெள்ளையான வெங்கச்சான் கல்லிலும் ஆய்வு செய்கிறார்கள்.
24:- கோலமாவு அரைக்க பயன் படுத்தப்படும் ஒரு வகை வெள்ளைக் கல்லையும் சிலர் ஆய்வுக்கு பயன்படுத்துகிறார்கள்.
25:- பளிங்குக் கல் என்ற கல்லையும் முப்பு ஆய்விற்கு பயன் படுத்துகிறார்கள்.
26:- கடைகளில் கிடைக்கும் சுண்ணாம்பு கற்களையும் பயன்படுத்தி ஆய்வு செய்கிறார்கள். சுண்ணாம்பு கல்லை நீற்றி தண்ணீர் ஊற்றி கலக்கி வைத்து மேலே படியும் ஆடையிலும் முப்பு செய்ய முயல்கிறார்கள்.
27:- முப்பிரண்டை, செங்கற்றாழை போன்றவற்றிலும் ஆய்வு செய்கின்றனர்.
28:- கணவாய் ஓடு எனப்படும் கடல் நுரையிலும் ஆய்வு செய்கிறார்கள்.
29:- சீதேவி மஞ்சள் எனப்படும் ஒருவகை உப்புக் கல்லிலும் ஆராய்ச்சி செய்கிறார்கள்.
30:- கடலில் பாறையில் கிடைக்கும் ஒரு வகை பாறை உப்பிலும் (Rock salt) முப்பு செய்ய முயல்கிறார்கள்.
31:- தாளகத்திலும் நான்கு வகை இருப்பதாக நூல்களில் காணப்படுவதால் தாளகத்திலும் சிலர் இரசவாத ஆய்வை மேற்கொள்கிறார்கள்.
32:- சோற்றுப்பு:
கடலுப்பு எனப்படும் சோற்றுப்பில் சிலர் முப்பு ஆய்வு செய்கிறார்கள். சித்தர்கள் சோற்றுப்பை கட்டி சாப்பிட சொல்லி உள்ளார்கள். எனவே முப்பு ஆய்வில் சோற்றுப்பு அல்லது கஞ்சியுப்பு என்பது பரிபாசையாகும். ஆனாலும் சிலர் கடலுப்பை செந்தூர சுண்ணம் செய்தால் எல்லாம் சித்தியாகும் என்று கூறி ஆய்வு செய்கிறார்கள். சோற்றுப்பை பனி நீரில் தீட்சை செய்து சுண்ணம் செய்யவும் சிலர் முயல்கிறார்கள்.
33:- கடல் கரையில் கிடைக்கும் உப்பு கலந்த சுண்ணாம்பு கல்லிலும் சிலர் ஆய்வு செய்கிறார்கள்.
34:- வீணாத்தண்டு இதுவே மெய்ப்பொருள் என்று கூறி ஆய்வு செய்கிறவர்களுமுண்டு.
35:- மலம் மற்றும் சிறுநீர் கொண்டு ஆய்வு செய்கிறவர்களுமுண்டு.
36:- பெண்கள் பிரசவிக்கும் போது வெளியாகும் பனிக்குட நீரைப் பயன் படுத்தி முப்பு செய்பவர்களுமுண்டு.
37:- கடையி விற்கும் ஆப்ப சோடாவை முப்பு என்று கூறி மருந்தோடு கலந்து பயன் படுத்தும் வைத்தியர்களும் உண்டு.
38:- பெண்களின் மாதாந்திர ருது ரத்தத்தைக் கொண்டும் சிலர் ஆய்வு செய்கிறறார்கள்.
39:- கரும்பு பால்தான் பூநீர் என்று கூறி கரும்பிலும் சிலர் ஆராய்ச்சி செய்கிறார்கள்.
40:- தேன்தான் மெய்ப்பொருள் என்று கூறி சிலர் ஆராய்ச்சி செய்கிறார்கள்.
இதுபோல் இன்னும் பலப்பல பொருட்களைக் கொண்டு முப்பு ஆய்வு செயகிறார்கள். ஆனால் இதுதான் முப்பு என்று யாராலும் தெளிவாக கூற முடியவில்லை. ஆனால் அவரவர் நம்பிக்கை கருத்து கொள்கைப்படி காலம் காலமாக ஆய்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

No comments:
Post a Comment