Saturday, September 7, 2019

காடி நீர்


காடி நீர் - Vinegar


காடி செய்யும் விதம்:

ஒரு பெரிய பாத்திரத்தில் கால் படி கருங்குருவை அரிசியை சமைத்து கஞ்சியும் சாதமும் இரண்டையும் கொட்டி 6 படி சுத்தநீர் விட்டு துணியால் வாய்கட்டி சூரிய புடத்தில் வைத்துவர வேண்டும் வாரத்திற்கு ஒரு முறை வேறு பாத்திரத்தில் மாற்றி விட வேண்டும் இப்படி ஒரு மாதம் கழிந்தபின் பார்க்க முதலில் போட்ட அன்னமானது காணப்படாது அந்த சமயம் மறுபடியும் கால் படி அன்னம் சமைத்து அதில் கலந்துவிட வேண்டும் கலந்தபின் நாள் தவறாமல் சூரிய  புடத்தில் வைப்பதுவும் வாரத்திற்கு ஒரு முறை பானை மாற்றுவதுவும் முக்கியமாய் கவனித்தல் வேண்டும் இதன்படி மாதம் ஒருமுறை அன்னம் சமைத்து கலந்துகொண்டு வரவேண்டும் இப்படி செய்துகொண்டு வருங்காலத்தில் மூன்று மாதத்திற்கு மேல் அந்த காடியை உபயோகித்து வரலாம் எவ்வளவு காடி எடுத்து கொள்ளுகின்றோமோ அவ்வளவு நீரை அதில் கலந்துவிட வேண்டும் இப்படி கலந்து வருவதால் எத்தனை ஆயிரம் பேருக்கு நாம் கொடுத்தாலும் காடி குறைந்துவிடாது ஆறு மாதத்திற்கு பின் காடியில் அதிக புளிப்பு ஏறிவிடும் ஆகையால் 4 நாளைக்கு ஒரு முறை பானை மாற்றுதல் வேண்டும் மழைக்காலங்களில் சூரிய புடத்தில் வைக்க இயலாத காரணத்தால் காடியில் பூசணம் பிடிக்காதபடி தடுக்க சமையல் செய்த பிறகு அடுப்பில் உள்ள நெருப்பை எடுத்து விட்டு அடுப்பின் மேல் காடியை வைத்து விட வேண்டும் இப்படி செய்ய காடி கெடாமல் இருக்கும் காடிக்கு அதிக நாள் ஏற ஏற புளிப்பு அதிகரிக்கும்புளிப்பு அதிகரிக்க அதிகரிக்க கொடுக்க வேண்டிய அளவை குறைத்தல் வேண்டும் ஆறு மாதத்திற்கு மேற்பட்ட காடியானது பௌர்ணமி தினத்தில் இரவில் ஒருவித சப்தத்தை உண்டு பண்ணும் .

காடியால் தீரும் வியாதி:

வயிற்று வலி, நீர் கடுப்பு ,மார்வலி, உஷ்ண பேதி ,அஜீரண பேதி ,விஷ பேதி முதலிய வியாதிகள் நீங்கும் சரீரத்திலுள்ள வெக்கையை போக்கும் .

காடி நீர் என்பது நம் நாட்டில் பழமையான ஒரு பெரிய மருந்து .

 கடையில் விற்கும் காடியானது சர்க்கரையை வாணலில் போட்டு வறுக்க வறுக்க ஒருவித கருநிறமாக மாறிவிடும் அப்பொழுது அஸெட்டிக் ஆசிட் வேண்டிய அளவிற்கு சேர்த்து நீரைக் கொட்டி வடிகட்டி புட்டியில் பதனம் பண்ணி  விற்கப்படுவதே காடி ஆகும் இந்த காடியும் புளிப்புள்ளதாக காணப்படும்.இந்த காடியை வாங்கி ஊர்காய்களுக்கும் மற்றும் மருந்தின் பிரயோகங்களுக்கும் உபயோகப்படுத்தி  வருகின்றார்கள் எனவே கடையில் விற்கும் காடியானது முன்னோர்கள் சொல்லி வைத்த காடி அன்று ஆனால் இது உடலுக்கு பெரும் தீங்கை விலைவிக்கும் என்று கூறப்படுகிறது.


No comments:

Post a Comment