Wednesday, June 18, 2025

நட்சத்திர சின்னம்


 வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள் - நட்சத்திர சின்னம் : #ஜோதிடம் 

==================================

ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பயன்படுத்துவது என்ற நிலையில் அவரது முயற்சிகளில் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன.


அன்றாட வாழ்வில் அனைவரும் வெற்றியை விரும்புகிறோம். ஆனால், தொடங்கிய காரியங்கள் அனைத்திலும், அனைவரும் வெற்றி பெறுவதில்லை. முயற்சிகள் தவறினாலும், முயற்சிக்க தவறாத மனதுடனும், பல்வேறு கேள்விகளுடனும் பலர் பல்வேறு வழிகளில் உழைத்துக்கொண்டுள்ளனர்.


வெற்றிக்கு தனி வழி வெற்றி என்பது பொது வழியல்ல. அது எப்போதும் தனி வழியாகத்தான் இருந்து வருகிறது. அதனால்தான் அன்றாட வாழ்வில் வெல்பவர் சிலராகவும், வீழ்பவர் பலராகவும் இருந்து வருகிறார்கள். 

வெற்றிக்கான நேர்வழி என்பது உழைப்பு தான் என்பது உலகளாவிய விதியாகும். ஆனால், உழைப்பவர்கள் அனைவரும் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்ல முடிவதில்லை.


உலகில் உள்ள அனைவரும், ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த வகையில் ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பார்ப்பது அல்லது பயன்படுத்துவது என்ற நிலையில் அவரது முயற்சிகளில் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன என்று முன்னோர்கள் கண்டறிந்துள்ளார்கள். 


ஜோதிட சாஸ்திர நூல்களில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும் சின்னம் அல்லது குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நமது தனிப்பட்ட வெற்றி சின்னங்களாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதாவது, வசிக்கும் வீடு, பணிபுரியும் இடம், அணியும் ஆடைகள், வியாபார நிறுவன சின்னங்கள், ‘லெட்டர் பேடு’ போன்றவற்றில் அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய சின்னங்களை பயன்படுத்தினால், வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு களும், சந்தர்ப்பங்களும் இயல்பாக அமைகின்றன என்பது நம்பிக்கையாகும்.


அதற்காக, புராண கால உதாரணங்களை இங்கே காணலாம். 


கீதையின் நாயகன் கிருஷ்ணனின் நட்சத்திரம் ரோகிணி என்பது அனைவரும் அறிந்த விஷயம். ரோகிணி நட்சத்திர குறியீடாக ‘தேர்’ குறிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜுனன் தேரின் சாரதியாக கிருஷ்ணன் இருந்து நடத்திய ‘பாரதப்போர் நாடகம்’ அனைவரும் அறிந்ததுதான். இன்னொரு உதாரணமாக ராமபிரானை இங்கே குறிப்பிடலாம். அதாவது, ராமரின் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம் ஆகும். அந்த நட்சத்திரத்தின் குறியீடாக வில் சொல்லப்பட்டுள்ளது. ராம பாணத்தை செலுத்த உதவும் வில்லை தனது ஆயுதமாக பயன்படுத்தி ஒவ்வொரு கட்டத்திலும் அவர் பெற்ற வெற்றிகள் இதிகாசமாக மலர்ந்ததை உலகமே அறியும்.


இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டுமென்றால் மூன்றடி உருவம் கொண்ட வாமன அவதாரம் திருவோண நட்சத்திரத்தில் நிகழ்ந்தது. அந்த நட்சத்திரத்தின் குறியீடாக மூன்று பாதச்சுவடுகள் குறிப்பிடப்படுகிறது. ஈரேழு உலகையும் ஈரடியாய் அளந்து முடித்த பின்னர், மூன்றாவது அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவனை பாதாள உலகத்துக்கு அனுப்பிய புராணத்தை அனைவரும் அறிவார்கள். 


பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தர்மரின் ஜென்ம நட்சத்திரம் கேட்டை என்று ஒரு தகவல் இருக்கிறது. அதன் குறியீடாக வேல் குறிப்பிடப்படுகிறது. தர்மர் வேலை குறி பார்த்து எறிவதில் திறமை மிக்கவராக சொல்லப்படுகிறார். பாரதப்போரில் சல்லியனோடு நடந்த போரில், திறமையாக வேல் எறிந்து அவனை வென்றது பாரதத்தில் குறிப்பிடப்படுகிறது.


ஆஞ்சநேயரின் ஜென்ம நட்சத்திரம் மூலம் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் குறியீடாக சிங்கத்தின் வால் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆஞ்சநேயரின் கைகளில் உள்ள ‘கதையின்’ வடிவம் கிட்டத்தட்ட அந்த வடிவத்தில் இருப்பதும், தனது வாலை எப்படியெல்லாம் பயன்படுத்தினார் என்பதையும் அனைவரும் நன்றாக அறிவோமல்லவா..? ருத்ரனான, சிவனின் ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை ஆகும். அதன் குறியீடாக மண்டை ஓடு சொல்லப்பட்டுள்ளது. 


ருத்ரன் மண்டையோட்டு மாலையை அணிந் திருப்பதோடு, கபால ஓட்டை கையில் வைத்திருப்பதும் கவனிக்கத்தக்கது. திருமகளான மகாலட்சுமியின் நட்சத்திரம் பூசம் ஆகும். அதன் குறியீடுகளாக தாமரை மற்றும் பசுவின் மடி ஆகியவை குறிப்பிடப்படுகிறது. மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் நட்சத்திரங்களுக்கான குறியீடுகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்தலாம் என்பதாகும். 


அதன் மூலம் ஒருவரது ஜனன கால கிரக நிலைகளுக்கு தக்கவாறு சாதகமான சூழல்கள் அமைகின்றன என்று கருதலாம். அந்த குறியீடுகளை அல்லது சின்னங்களை நமது வெற்றிக்கான ‘பார்முலாவாக’ பயன்படுத்தி, வெற்றிக்கான கூடுதல் வாய்ப்பு களையும் பெறலாம்.

Diabetes Diagnosis by scoring method

 Diabetes Diagnosis by Scoring Method:

Before diagnosis Diabetes ask these 3 questions:


1) Age:

If below then 40 consider 0

If above then 40 consider 1

If above then 50 consider 3


2) Family History of Diabetes:

If there is family history of diabetes consider 1

If no history then consider 0


3) Waist Size:

For Male: If more than 35 1/2 inch consider 2

If less then consider 0

For Female: If it's more than 31 1/2 then consider 2

If less then consider 0


Result:

If your score is 4 or more than 4 then you are Diabetic or you becoming Diabetic. 


siddha Nanda Kumar

 guduvanchery 

82488 90954

Monday, February 10, 2025

மூலிகை பொடி பயன்கள்

 நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?


அருகம்புல் பொடி:

அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி.


நெல்லிக்காய் பொடி:

பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது.


கடுக்காய் பொடி:

குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.


வில்வம் பொடி:

அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது.


அமுக்கரா பொடி:

தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.


சிறுகுறிஞான் பொடி:

சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.


நாவல் பொடி:

சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.


வல்லாரை பொடி:

நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.


தூதுவளை பொடி:

நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.


துளசி பொடி:

மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.


ஆவரம்பூ பொடி:

இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.


கண்டங்கத்திரி பொடி:

மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.


ரோஜாபூ பொடி:

இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.


ஓரிதழ் தாமரை பொடி:

ஆண்மை குறைபாடு,

மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.


ஜாதிக்காய் பொடி:

நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.


திப்பிலி பொடி:

உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.


வெந்தயப் பொடி:

வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.


நிலவாகை பொடி:

மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.


நாயுருவி பொடி:

உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.


கறிவேப்பிலை பொடி:

கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது. ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரும்புச் சத்து உண்டு.


வேப்பிலை பொடி:

குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.


திரிபலா பொடி:

வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.


அதிமதுரம் பொடி:

தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.


துத்தி இலை பொடி:

உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.


செம்பருத்திபூ பொடி:

அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.


கரிசலாங்கண்ணி பொடி:

காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.


சிறியாநங்கை பொடி:

அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.


கீழாநெல்லி பொடி:

மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.


முடக்கத்தான் பொடி:

மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.


கோரைகிழங்கு பொடி:

தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.


குப்பைமேனி பொடி:

சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.


பொன்னாங்கண்ணி பொடி:

உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.


முருங்கை விதை பொடி:

ஆண்மை சக்தி கூடும்.


லவங்கபட்டை பொடி:

கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.


*வாதநாராயணன் பொடி:

பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.


*பாகற்காய் பவுட்ர்:

குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.


*வாழைத்தண்டு பொடி:

சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.


*மணத்தக்காளி பொடி:

குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.


*சித்தரத்தை பொடி:

சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.


*பொடுதலை பொடி:

பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.


*சுக்கு பொடி:

ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.


*ஆடாதொடை பொடி:

சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.


*கருஞ்சீரகப்பொடி:

சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.


*வெட்டி வேர் பொடி:

நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.


*வெள்ளருக்கு பொடி:

இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.


*நன்னாரி பொடி:

உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நாவறட்சிக்கு சிறந்தது.


*நெருஞ்சில் பொடி:

சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.


*பிரசவ சாமான் பொடி:

பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.


*கஸ்தூரி மஞ்சள் பொடி:

தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.


*பூலாங்கிழங்கு பொடி:

குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.


*வசம்பு பொடி:

பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.


*சோற்று கற்றாழை பொடி:

உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.


*மருதாணி பொடி:

கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.


*கருவேலம்பட்டை பொடி:

பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும். ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை, இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும்.


இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?


1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.


2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.


3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.


4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.


5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.


6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.


7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்....