Tuesday, December 17, 2024
Saturday, November 16, 2024
இரண்டாவது குழந்தையால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்
இரண்டாவது குழந்தையால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தாய் இரண்டாவது குழந்தையை பெற்றெடுப்பது, அந்த குடும்பத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதுவும் அவர்களது எதிர்பார்ப்பைப் போல முதல் குழந்தைக்கு மாற்றாக ஆண்வாரிசுக்கு துணையாக பெண் குழந்தையோ, பெண் குழந்தைக்கு துணையாக ஆண் குழந்தையோ பிறந்தால் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. குடும்பம் முழுமை பெற்றதாக மனதுக்குள் மத்தாப்பு பூக்கும். ஆனால் இரண்டாவது குழந்தையின் வரவு, முதல் குழந்தையின் மகிழ்ச்சியான உலகத்தில் மாற்றங்களை ஏற்படுத்திவிடக் கூடாது. குடும்பத்திற்கு முதல் வாரிசாக வந்து, அனைவரின் அன்பிலும் நனைந்தவர்கள், இரண்டாவது குழந்தையின் வரவால், புறக்கணிக்கப்பட்டால் நிச்சயம் ஏங்கிப்போவார்கள். அவர்களின் நடவடிக்கையில் மாற்றத்தை காண நேர்ந்தால் பெற்றோர் கவனமாக செயல்பட வேண்டும்.
இரண்டாவது குழந்தையின் வரவால், பெற்ற தாய்கூட முதல் குழந்தையிடம் இருந்து சற்று விலக வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். அது இரண்டாவது குழந்தையை பாதிப்பதற்கு முன்பு பெற்றோர் சுதாரித்துக்கொள்ளவேண்டும்.
அதுவரை எல்லோரது கவனத்தையும் ஈர்த்து, அன்பு மழையில் நனைந்தது முதல் குழந்தையே. திடீரென்று அந்த கவனிப்புகள் எல்லாம் அப்படியே குறைந்து, இரண்டாவது குழந்தைக்கு முன்னுரிமை கிடைப்பதை கவனிக்கும் மூத்த குழந்தை, மனதளவில் ரொம்பவே பாதிக்கப்படும். மன அழுத்தத்திற்கு உள்ளாகும். சில குழந்தைகள் சோர்வாகவும், இன்னும் சிலர் கோப முகமாகவும் மாறிப்போக வாய்ப்பிருக்கிறது. கத்துவது, அழுவது, சேட்டை செய்வது என அவர்களின் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகள் திடீரென்று அப்படி மாறிப்போவதற்கு காரணம், மற்றவரின் கவனத்தை தன்பக்கம் ஈர்க்கும் முயற்சியே.
மேலும் சில குழந்தைகள் வளர்ச்சியில் பின்தங்கிப்போகும் வாய்ப்பு உண்டு. டம்ளரில் பால் குடித்துப் பழகிய அவர்கள், சிறு குழந்தையாக இருந்தால்தான் கவனிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் புட்டிப்பால் குடிக்கும் பழக்கத்திற்கு மாறுவார்கள். இதுபோல பேச்சிலும், நடவடிக்கையிலும் சில பின்ன டைவுகளை காணலாம்.
வேண்டுமென்றே அந்தக் குழந்தைகள் செய்யும் இதுபோன்ற சேட்டைகள் பெற்றோரையும், சுற்றி இருப்பவர்களையும் கோபம் கொள்ளச் செய்யலாம். ஆனால் ‘அது திமிர் குணம்’ என்று அவர்களை கண்டித்துக் கொண்டிருந்தால் தவறு உங்கள் பக்கம்தான். பெற்றோரை தன்பால் ஈர்க்கவேண்டும் என்பதற்காகத்தான் குழந்தைகள் அவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதை பெற்றோர் உணர்ந்து தங்கள் கோபத்தைக் குறைத்து, முதல் குழந்தை மீது வழக்கம்போல் அன்பு செலுத்த முன்வரவேண்டும்.
‘பெற்றோரை பொறுத்தவரையில், அவர்கள் தங்கள் முதல் குழந்தை பக்குவமானவர்களாக ஆகிவிட்டார்கள். எதையும் புரிந்து கொள்வார்கள் என்று தவறாக கணித்துவிடுகிறார்கள். இரண்டாவது குழந்தை பிறந்துவிட்டாலும், முதலில் பிறந்ததும் அதுபோன்றதொரு குழந்தைதான் என்பதை பெற்றோர் மனதில்வைத்துக்கொள்ள வேண்டும்’ என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.
குழந்தைகள் உலகத்தைப் பொறுத்தவரையில் இந்த திடீர்மாற்றங்கள் பெரிய தடுமாற்றத்தை உருவாக்கும். சவாலான இந்த சூழலை சமாளிக்கத் தெரியாமல் முதல் குழந்தைகள் கவலைகளுடன் சவலைகளாக மாறிப்போகலாம். இதுபோன்ற மாற்றங்களை அறிந்தால் பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?...
“உன் மீதும் முன்புபோல் அன்பு வைத்திருக்கிறோம் என்பதை முதல் குழந்தைக்கு புரிய வைக்கும் விதமாக பெற்றோர் செயல்பட வேண்டும். அதற்கு இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமக்கும் போதிருந்தே முதல் குழந்தையை தயார்படுத்த வேண்டும். கர்ப் பிணியான தாயின் வயிறு பெரிதாகிக்கொண்டே வருவதுகூட முதல் குழந்தைக்கு வித்தியாசமாகத் தெரியும். தாயின் மேடான வயிற்றைத் தொட்டுப் பார்க்கவும், வயிற்றில் தட்டவும் அதற்குத் தோன்றலாம். அல்லது பயத்தையும் உருவாக்கலாம். அப்போதே முதல் குழந்தைக்கு உண்மையை புரியவைத்து, பிறக்கப்போகும் இரண்டாவது குழந்தை பற்றிய அடிப்படை விஷயங்களை தெளிவுபடுத்துவதுடன், தன் சகோதரனை (அல்லது சகோதரியை) வரவேற்க முதல் குழந்தையை தயார் செய்ய வேண்டும்” என்கிறார்கள் மகப்பேறு மற்றும் உளவியல் நிபுணர்கள். ‘அதற்கு சரியான தருணம் தாய் கர்ப்பமாக இருக்கும் 4-வது மாதம்’ என்கிறார்கள்.
“நான்காவது மாதத்தில் தாய்க்கு வயிறு பெரிதாகத் தொடங்கும். அப்போதே முதல் குழந்தையிடம், உன்னுடன் விளையாட ஒரு தம்பி (அல்லது தங்கை) தயாராகி வருகிறது என்று சொல்லவேண்டும். அப்போதிருந்தே அவர்கள் தன் உடன்பிறப்பை மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். இப்படி கர்ப்பத்திலிருந்தே மூத்த குழந்தையை சகோதர பாசத்திற்குப் பழக்கினால், அவைகள் இயல்பாகிவிடும்.
பிறக்கப் போகும் தம்பி - பாப்பா உன்னுடன் விளையாட ஓடி வரும். நீ சொன்னதையெல்லாம் கேட்கும், நீதான் அவனை-அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் சிறந்த நண்பர்களாக இருக்க வேண்டும், என்றெல்லாம் கூறி முதல் குழந்தையிடம் ஆவலைத்தூண்ட வேண்டும்” என்று விளக்கம் தருகிறார்கள்.
இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு நிஜமாகவே முதல் குழந்தையிடம் முன்புபோல் அக்கறை காட்ட முடியாமல் போக வாய்ப்புகள் அதிகம் என்பதால் தாயின் கர்ப்பகாலகட்டமே முதல் குழந்தைக்கு புரியவைக்க சரியான தருணம். அப்போதே எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்கலாம். அவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கலாம். புதுவரவை மகிழ்வுடன் ஏற்கும் மனப்பக்குவத்துக்கு அவர்களும் தயாரானால்தான், தனிமை உணர்வில் தள்ளப்படமாட்டார்கள்.
இரண்டாவது குழந்தைக்கு பொருட்கள் ஏதாவது வாங்கச்சென்றால், மூத்த குழந்தையையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். பாப்பாவுக்கு எந்த உடையை தேர்வு செய்யலாம், எந்த பொம்மையை வாங்கலாம் என்பது பற்றி மூத்த குழந்தையிடமும் ஆலோசனை கேளுங்கள். பாப்பாவுக்கு இது நன்றாக இருக்கும் என்று அவர்கள் கூறும் கருத்துகளுக்கு முன்னுரிமை தாருங்கள். அவர்கள் எடுத்துக் கொடுக்கும் பொம்மைகளிலும் சிலவற்றை தேர்வுசெய்து இரண்டாவது குழந்தைக்கு விளையாடக் கொடுங்கள். அது இரு குழந்தைகளையுமே மகிழ்ச்சிப்படுத்தும்.
‘பாப்பாவை நானும் தூக்கிவைத்துக்கொள்கிறேன்’ என்று மூத்த குழந்தை கேட்டால், அவர்களின் மடியில் பாதுகாப்பாக உட்காரவைக்க அனுமதியுங்கள். ‘உன்னால் வைத்துக்கொள்ள முடியாது. உன்னிடம் தரமாட்டேன்’ என்றெல்லாம் கூறி, புறக்கணித்துவிடாதீர்கள். மாறாக ‘தம்பி பாப்பாவுடன் விளையாடவும், கவனமாகப் பார்த்துக்கொள்ளவும் உரிமை உள்ளவன் நீதான். நீ சமர்த்தாக நடந்து கொண்டு பாப்பாவை அழாமல் பார்த்துக் கொண்டால்தான் அவளும் உன்னைப்போல் சமர்த்தாக வளர்வாள்” என்று ஊக்கம் கொடுங்கள்.
அதுமட்டுமல்லாமல் அந்த சூழலை சமாளிக்க கணவரையும் தாய்மார்கள் பழக்கப்படுத்த வேண்டும். குழந்தை பிறக்க இருக்கும் 2 மாதங்களுக்கு முன்பே முதல் குழந்தையை குளிப்பாட்டவும், உணவு ஊட்டவும், தூங்க வைக்கவும் கணவரை பழக்கப்படுத்தச் சொல்லலாம். அப்படி தந்தை தன்னுடன் நேரத்தை செலவிட்டால், முதல் குழந்தைக்கு தனக்கும் போதிய முக்கியத்துவம் கிடைக்கிறது என்ற எண்ணம் உருவாகும்.
Thursday, October 24, 2024
Thursday, October 10, 2024
Sunday, August 25, 2024
திருமணம் பொருத்தம்
12 வகையான திருமணப் பொருத்தங்கள் -
1 தினப் பொருத்தம் :
மணமக்களின் ஆயுள் ஆரோக்கியம் இவை இரண்டையும் குறிப்பிடுவது. இது முக்கியம்.
2 கணப்பொருத்தம் :
இது குணநலன் பண்பு நலனைக் குறிக்கும் இது மூன்று வகை தேவகானம் மனித கனம இராட்சஷ கணம். 27 நட்சத்திரங்கலியா முன்று பிரிவாகப் பிரித்து இன்ன நட்சத்திரத்தில் பிறந்தவர் இன்ன கணம் என்று முனிவர்கள் வகுத்துள்ளார்கள். இது முக்கியம். குண நலம் வாழ்விற்கு எத்துணை அவசியம் என்பது நீங்கள் அறிவீர்கள்.
3 மாகேந்திரப் பொருத்தம் :
பொருளாதார வளமாக அமைந்திட இப் பொருத்தம் வேண்டும்.
4 ஸ்திரீ தீர்க்கம் :
மணமகள் தீர்க்க சுமங்கலியாய் வாழ்ந்து சுமங்கலியாயாகவே வாழ்வு நிறைவு பெறுவாள் என்பதாகும்.
5 யோனிப் பொருத்தம் :
இது மிக முக்கியமானது. பெரும்பான்மையான மனிதர்கள் உடல் தேவையே வாழ்வு என மயங்குகின்றனர். உடல் தேவையைப் பூர்த்தி செய்ய இப் பொருத்தம் வேண்டும். வேறு ஏதோ குறிக்கோளுக்காக இந்த வாழ்வை இறையருள் தந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள மனிதனை இழுக்கும் ஒரு மாயப் பொறி என்பதனை அனுபவஸ்தர்கள் அறிவார்கள். எனினும் உடலுடன் கூடிய வாழ்வில் தான் குறிக்கோளை அடைய முடியும். வாலிபக் காலத்தில் உடலில் கட்டளைக்கு மனக் ஒத்துழைத்து செயற்படும். அறிவு ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்கும். சில காலம் சென்ற பின் இயற்கைச் சட்டப்படி உடல் தளரும் ஞானம் பிறக்கும் அறிவுப்பூர்வமாக சிந்திப்பார். கடந்த கால வாழ்வை எண்ணி கலி விரக்கம் கொள்வார். வாழ்வில் இளமையில் பிழையும் நடுப் பகுதில் போராட்டமும் முதுமையில் கடந்த கால வாழ்வை எண்ணி கழிவிரக்கம் கொள்வதுதான் பெரும்பான்மையானவர்களின் வாழ்வாக இருக்கிறது. விதிவிலக்காக தற்சோதனை செய்து வாழ்வின் குறிக்கோளை உணர்ந்து மரணமில்லாத வாழ்வை அடைந்தவர் பலருண்டு. இதைக்கூறிடும் தகுதி எனக்கு உண்டு. ஏனெனில் பல்லாயிரக்கான மானிடரின் தனிப்பட்ட வாழ்வை அறியும் சூழ்நிலையில் என்பணி அமைந்தது தான் காரணம். எனவே மனிதன் மனிதப் பண்போடு பிற்காலத்தில் வாழ்ந்திட இப்பொருத்தம் துணை செய்யும். எனவே இது முக்கியம்.
6 இராசிப் பொருத்தம் :
இது வம்ஸ விருத்திக்காக. இது முக்கியம்.
7 இராசி அதிபதி பொருத்தம் :
சந்ததிகள் விருத்திக்காகவும் ஒருவர்க்கொருவர் நேசமுடன் வாழ வழி வகுப்பதற்காகவும் இது உதவும்.
8 வசியப் பொருத்தம் :
மணமக்களின் நேச வாழ்விற்காக
9 ரஜ்ஜிப்பொருத்தம் :
இது உயிர்நாடி போன்ற பொருத்தமாகும். வாழ்வில் முக்கியமான ஆயுள் புத்தோஷம் பிரயாணத்தில் தீமைக் பொருள் இழப்பு இவைகளைப் குறிப்பிடுவது. இதற்கு தீர்க்க சுமங்கலிப் பொருத்தம் என்று பெயரும் உண்டு இப்பொருத்தம் இல்லை எனில் மனம் முடிக்கக் கூடாது. இது மிக முக்கியம்.
10 வேதைப் பொருத்தம் :
துக்கத்தை நீக்கக்கூடிய பொருத்தம்.
11 நாடிப் பொருத்தம் :
இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.
12 விருட்சப் பொருத்தம் :
ஆண், பெண் இருவரில் யாருக்காவது பால் மரமாக இருந்தால் புத்திர பாக்கியம் உண்டு.
இந்த 12 பொருத்தங்களையும் சரிபார்த்து இன்ன நட்சத்திரப் பெண்ணிற்கு இன்ன நட்சத்திர வரன் இத்தனை பொருத்தங்கள் அமைகின்றன என்றும் பொருத்தம் உண்டு அல்லது இல்லை என்றும் அறிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளோம்.
Saturday, August 24, 2024
Friday, May 24, 2024
அவசர உதவி எண்கள்
அவசர அவசிய உதவி எண்கள்
1 அவசர உதவி அனைத்திற்கும்
911/112
2 வங்கித் திருட்டு உதவிக்கு
9840814100
3 மனிதஉரிமைகள் ஆணையம்
044-22410377
4 மாநகரபேருந்தில் அத்துமீறல்
09383337639
5 போலீஸ்
9500099100 or 100
6 போலீஸ் மீது ஊழல் புகாருக்கு
9840983832
7 போக்குவரத்து விதிமீறல்
98400 00103
8 தீயணைப்புத்துறை
101
9 போக்குவரத்து விதிமீறல்
103
10 விபத்து 100, 103
11 ஆம்புலன்ஸ் 102, 108
12 பெண்களுக்கான அவசர உதவி 1091
13 குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
14 அவசர காலம் மற்றும் விபத்து
1099
15 முதியோர்களுக்கான அவசர உதவி 1253
16 தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி 1033
17 கடலோர பகுதி அவசர உதவி
1093
18 ரத்த வங்கி அவசர உதவி
1910
19 கண் வங்கி அவசர உதவி -
1919
20 விலங்குகள் பாதுகாப்பு
044-22354959
044-22300666
1098 இந்த நம்பரை பெண் பிள்ளைகளிடம் கொடுத்து அனுப்புங்கள்
Tuesday, March 12, 2024
Monday, March 4, 2024
Friday, January 19, 2024
Wednesday, January 17, 2024
முடக்குவாதம்
முடக்குவாதம்...
அங்கங்களை முடக்கிவிடுவதால் இந்த நோயை முடக்குவாதம் என்று சொல்வார்கள். இதைப் பற்றி 3000 ஆண்டுகளுக்கு முன்பே சரகர், சுஸ்ருதர், வாக்படர் ஆகியோர் எழுதியுள்ளனர். இதை மகாவாத வியாதி என்றும், குடம் என்றும், வாத பலாசம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். நவீன மருத்துவத்தில் இது Rheumatoid arthritis.
இது ஒரு autoimmune disease. அதாவது வீட்டில் வளர்க்கும் நாய் திருடனைக் கடிக்காமல், தன்னை வளர்ப்பவரையே கடிப்பது போன்றது. உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி ஆரோக்கியமாக உள்ள ஒரு திசுவை எதிர்க்கும் மோசமான நிலை இது. இந்த நோய் எந்த வயதிலும் வரலாம். ஆனால், நடுத்தர வயதில் அதிகம் வரும். ஆண்களைவிடப் பெண்களை இந்த நோய் அதிகமாகத் தாக்கும்.
பொதுவாகக் கை, கால் மூட்டுகளில் பாதிப்பை வெளிப்படுத்தும். கை மூட்டுகள் அழற்சி ஏற்பட்டு வளைந்துபோகும். மணிப் பந்து மூட்டுகள், விரல்கள், கணுக்கால், முழங்கால் போன்றவை பாதிக்கப்பட்டு நீர் சேர்ந்து காணப்படும். மெதுவாகத் தொடங்கி மூட்டுகளை அழிக்கும் தன்மையைப் பெறும்.
மூட்டுகளில் வலி ஏற்படும், மூட்டுகளை நீட்ட, மடக்க இயலாத தன்மை காணப்படும். காலையில் எழுந்தவுடன் இரண்டு மணி நேரத்துக்கு எந்த வேலையும் செய்ய முடியாது. இதை morning stiffness என்று சொல்வார்கள்.
மூட்டுகள் சூடாக இருக்கும், தொட்டால் வலிக்கும். உள்ளேயும் வலி காணப்படும். இதனால் மூட்டை அசைக்கவோ, நீட்டவோ இயலாது. மூட்டுகள் வளைந்து காணப்படும். மேலும் நுரையீரல் பாதிக்கப்படலாம். இதை pleurisy, interstitial lung disease என்று சொல்வோம்.
கண்கள், வாய் வறண்டு போகலாம். இதை rheumatoid nodules என்று சொல்வோம். உடலில் சிறு கழலைகள் தோன்றும். இதைக் கிரந்தி என்று சொல்வோம். இதை Hb, ESR, Anti CCP antibody என்று அழைப்பார்கள். வலி அவதிப்படுத்துவ தால், இவர்களால் நன்கு தூங்க முடியாது.
முடக்கு வாதம் அஜீரணத்தால் ஏற்படுகிறது, கீல்வாதம் போன்ற மூட்டுகளில் உராய்வு காரணமாக அல்ல.
முடக்கு வாதம் இனி வயதானவர்களுக்கு மட்டும் அல்ல, கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் உட்பட இளைஞர்களிடையே இந்த நிலைமை அதிகரித்து வருகிறது.15-20 சதவீத இளம் நோயாளிகள் (35-40 வயது) மூட்டு வலியாலும் பாதிக்கப்படு
கின்றனர்.
Rheumatoid arthritis (RA) என்று அழைக்கப்படும் முடக்கு வாதம் ஒரு ஆட்டோ இம்யூன் கோளாறு. அதாவது உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பு, உங்கள் சொந்த செல்கள் மற்றும் வெளி செல்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை அடையாளம் காண முடியாதபோது ஆட்டோ இம்யூன் நோய் ஏற்படுகிறது, இதனால் உடல் சாதாரண செல்களை தவறாக தாக்குகிறது.
முடக்கு வாதம் மூட்டுகள், தோல், கண்கள், நுரையீரல், இதயம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது. இது ஒரு நபரின் நோயெதிர்ப்பு அமைப்பு உடல் திசுக்களைத் தாக்கத் தொடங்கும் ஒரு நிலை.
சூடான, வீங்கிய மூட்டுகள்,
பாதிக்கப்பட்ட மூட்டுகளின் சமச்சீர் முறை
* சோர்வு, அவ்வப்போது காய்ச்சல், ஆற்றல் இழப்பு
*மணிக்கட்டு மற்றும் விரல் மூட்டுகளை அடிக்கடி பாதிக்கும் மூட்டு வீக்கம்
*மூட்டு வீக்கம் சில நேரங்களில் கழுத்து, தோள் பட்டை, முழங்கைகள், இடுப்பு, முழங்கால்கள், கணுக்கால் மற்றும் பாதங்களில் உள்ள மூட்டுகளை பாதிக்கும்.
முடக்குவாதத்தில் மூட்டுகள் பெரிய அளவிற்கு சேதமடைகின்றன, இது இறுதியில் அதன் அழிவு மற்றும் சிதைவுக்கு வழிவகுக்கிறது.
நமது உண்ணும் உணவுகளில் மஞ்சளுக்கு மிகப்பெரிய பங்குண்டு. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. ஒரு விழுப்புண்ணில் இருந்து புற்றுநோய் பாதிப்பு வரை குணப்படுத்தும் வல்லமை கொண்டது மஞ்சள். நம்முடைய தமிழ்ச் சமூகத்தில் மஞ்சளின் பயன்பாடு அளவிட முடியாததாக உள்ளது. அனைத்து வகையான உணவுகளில் சேர்ப்பதற்கான திறன் கொண்ட மஞ்சள், முடக்குவாத பிரச்னைக்கு நல்ல தீர்வை அளிக்கக்கூடியதாக உள்ளது. அலோபதி மருந்து முறையில் முடக்குவாதத்துக்கு கொடுக்கப்படும் மருந்துகளிலும் மஞ்சளின் சேர்க்கை இடம்பெற்றிருக்கும். தினசரி உணவில் மஞ்சளை தவிர்க்காமல் சேர்த்துக்கொள்வது நல்ல பலனை தரும்.
ஆங்கில மருத்துவத்தில் முடக்குவாதத்துக்கு மஞ்சளுடன் சேர்த்து கொடுக்கப்படும் மற்றொரு மருந்து போஸ்வில்லியா. இதுதான் தமிழில் சாம்பிராணி என்று பயன்படுத்துகிறோம். முடக்குவாத பிரச்னைக்கு சாம்பிராணி ஒரு அருமருந்தாகும். பரங்கி மரத்தின் பிசினில் இருந்து செய்யப்படும் சாம்பிராணிக்கு நிறைய நற்குணங்கள் உள்ளன. இது எலும்பு பிரச்னை, மூட்டு வலி மற்றும் முடக்கு வாதத்துக்கு நிரந்தர தீர்வு அளிக்கக்கூடியதாகும். இதுபோன்ற கம்யூட்டர் சாம்பிராணியில் பலன் கிடைக்காது. சாம்பிராணி மூலம் கிடைக்கும் புகையை மூச்சுவழியாக சுவாசிப்பதால், நமக்கு சைனஸ் பிரச்னை, நுரையீறல் சார்ந்த பிரச்னைகள் உடனடியாக நீங்கும். மேலும், சாம்பிராணி புகையை சுவாசிப்பதால் உடலில் எங்கும் நீர் கோர்க்காது.
நன்றி
C.Nanda kumar
N18 Siddha Varma sigichialayam