Tuesday, March 5, 2019

Lemongrass🍋🍋🍋

லெமன் க்ராஸ் LEMONGRASS

உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்யும் எலுமிச்சை புல் டீ..! எப்படி தயாரிக்கணும்னு தெரியுமா..

சில சின்ன சின்ன வகை செடிகளின் பயன்களை நாம் கண்டு கொள்வதே இல்லை. ஆனால், இதில் தான் ஏராளமான பயன்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது. எதிர்ப்பு சக்தி குறைபாடு முதல் தொப்பை குறைப்பு வரை, பலவித பிரச்சினைகளுக்கு தீர்வை தருகின்றது இந்த டீ. இந்த டீயை குடித்து வருவதால் ஏரளமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்யும் எலுமிச்சை புல் டீ..! எப்படி தயாரிக்கணும்னு தெரியுமா..
இதனை மூலிகை டீயாகவும் ஆயுர்வேதத்தில் குறிப்பிடுகின்றனர். இந்த டீயை இந்த பதிவில் கூறுவது போன்று தயாரித்து குடித்தால் உடலில் எந்த வித நோய்களும் உண்டாகாமல் அதிக ஆயுளுடன் நீங்கள் வாழலாம். அப்படி என்னதான் இந்த எலுமிச்சை புல்லில் உள்ளது என்கிற கேள்விக்கான விடை இதோ..!

உலக பிரசித்தி பெற்ற டீ..!
பொதுவாகவே ஒவ்வொரு ஊரிலும் ஒருவிதமான டீ மிக பிரபலமாக இருக்கும். அந்த வகையில் இந்த எலுமிச்சை புல் டீ ஆசிய நாடுகள் மற்றும் தாய்லாந்தில் ரொம்ப பிரபலமானது. இதை குடிப்பதால் தான் அங்குள்ள மக்கள் நீண்ட ஆயுளுடன் இருக்கின்றனர் எனவும் கூறப்படுகிறது.

ஆயுர்வேத மூலிகை..!
இந்த எலுமிச்சை புல் ஒருவித ஆயுர்வேதமாகவே கருதப்படுகிறது. இந்த புல்லின் மருத்துவ தன்மை அதிக ஆற்றல் வாய்ந்தது. உடல் முழுக்க உள்ள கழுவுகளையும் நச்சுக்களையும் வெளியேற்ற இந்த டீ பெரும்பாலும் உதவும். இது எலுமிச்சையை போன்ற மணமும் கொண்டது.

நோய்களை துரத்தும் புல்..!
எலுமிச்சை புல் அதிக மருத்துவ குணம் கொண்டது. இவற்றில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் அதிக அளவில் உள்ளன. இந்த புல்லை டீ போன்று தயாரித்து குடித்தால் நோய்கள் அனைத்தும் பறந்து போய் விடும்.

உயர் ரத்த அழுத்தத்திற்கு
இந்த புல்லில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இது ரத்த ஓட்டத்தை சீராக வைத்து உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும், ரத்தத்தில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலையும் முழுவதுமாக குறைக்கவும் இந்த டீ பயன்படுகிறது. எனவே உங்களுக்கு இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

 1 வாரத்திற்கு தினமும் காலையில் 3 பேரீட்சைகளை சாப்பிட்டு வந்தால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா..!

ஒல்லியாக மாற...
பலருக்கு உடல் எடையை குறைத்து ஒல்லியாக வேண்டும் என்கிற எண்ணம் அதிகமாகவே இருக்கும். உங்களின் ஆசையை எளிதாக நிறைவேற்றுகிறது இந்த டீ. குறைந்த கலோரிகள் இதில் இருப்பதால், உடல் எடையை மிக சீக்கிரத்திலே இது குறைத்து விடும்